திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
**~ 11..04..2008~**
மணமகன் :~ யாழ்_அகத்தியன் மணமகள் :~ நிலா
மணமகனே மணமகளே….
நீவிர்….
மணவறை மீதினில் மகிழ்வுடனே
இருமனம் இணைந்த திருமண வாழ்வினில்
இனிதே இருவரும் மனம் மகிழ-இன்று
திருமண வாழ்வு மலர்ந்ததுவே.
காசினியில் ஒரு காவியம் படைப்பீர்
மேதினியில் புது வேதம் சமைப்பீர்
ஆதிமுதல் இனி அந்தம் வரை
மனு நீதியுடன் புது வாழ்வு காண்பீர்.
மணமேடை ஒளிவீச மலர் தூவி மணம்வீச
பூங்காற்றுத் தாலாட்ட புதுராகம் இசைபாட
மாங்கல்யம் காணும் மணமக்களே- நீங்கள்
ரீங்காரம் பாடும் வண்டுகள் தானே
பொன்னாரம் மின்ன பூவாரம் புன்னகைக்க
கண்ணோரம் ஆனந்தக் கண்ணீர் மல்க
எந்நாளும் வாழ்வில் பொன்னான நாளாய்
விடிகாலை விடிய விடிவெள்ளி சிரிக்க
அடியெடுத்து வையுங்கள் புது வாழ்வில்
விடிவுமக்கு இனித்தானே சுக வாழ்வில்.
ஈருயிரும் ஓருயிராய் இருமனமும் ஒருகுணமாய்
ஒருமித்த வாழ்வில் என்றும் ஒளிவீசி வாழ்வீர்
ஈரெட்டுத் திக்கிலும் பேர் கிட்டும் வகையிலே
ஈரெட்டுச் செல்வங்கள் சேரட்டும் வாழ்விலே.
முற்றத்தில் எந்நாளும் சுற்றங்கள் சேர்ந்து
சந்தோச வாழ்வினில் சங்கீதம் பாடி என்றும்
நிலம் போற்ற வாழ்வீர் உளம் மகிழ்ந்து வாழ்வீர்
வாயார வாழ்த்துகின்றோம் நீடூழி வாழ்கவென
**வாழ்த்துவோர் நிலாமுற்ற உறவுகள்**
என்றென்றும் வாழ்த்துக்களுடன்
**~புதுயுகப் பிரியன்~**
எங்கள் திருமணத்துக்கு வாழ்த்துக்கூறிய அத்தனை வாசக உறவுகளுக்கும் எங்களது அன்பு கலந்த நன்றிகள்..
|