* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இரக்கமில்லாத குண்டு....!
 


இரக்கமில்லாத குண்டு
......!

தும்மலுக்கு மருந்தெடுக்க போனவன்
குண்டுமழையில் நனைந்தபடி வீடு
வந்து சேர்ந்தான் பிணமாக...


***********கொள்ளிவைக்க யாரும்
மிஞ்சவில்லை
ஒரே குண்டில் குடும்பமே
பலி...


************
குழந்தையில் வீட்டில் 
ஊர்ந்து பழகியது
உதவி செய்கிறது
குண்டுவிமானம் வருகையில்
தெருக்களில் ஊர....


***********


பத்து மாதம் சுமந்தவளும்
இறந்து போகிறாள்
பதினைந்து நிமிடம் சுமக்க
முடியாத விமானத்தின்
குண்டுகளால்....


***********


எனக்கும் யோதிடம் தெரியும்
என் சாவும் குண்டுகளால்தான்
எந்த குண்டால் என்பதைத்தான்
கணிக்கமுடியவில்லை.....

************


குண்டுகளை தயாரிப்பவர்களே
நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி,
தங்கையோடு பிறந்ததில்லையா...?


**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 25 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free