* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  பூவானவளே......!
 


பூவானவளே.....!

 


உனக்கு சந்தேகம்  அதிகம்தான்
இல்லையென்றால் எதற்காக
உன்னோடு நட்சத்திரங்களையும்
கூட்டிப் போகிறாய்.....
-------------------------------------- என் இதயக் 
கரும்பலகையில்
உன் பெயரே
நிலவு.......

--------------------------------------


உன் இதழைத் தொட்டுக்
கொடுப்பதால்தான்
கேட்டு வாங்குகிறாய்
என் முத்தங்களை........

--------------------------------------முத்தக் கவிதைக்காய்
என் காது மடலையும்
விட்டு வைக்கவில்லை
உன் இதழ்கள்........

--------------------------------------
 


அம்மா எவ்வளவுதான்
சுற்றிப் போட்டாலும்
உன் கண்படும் இடத்தில்
எப்போதும் நான்.......


**********************************
************************
***************
*****
**
*

-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 64 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free