காதல் கவி நீ...*1*
எனக்குள் நிறைந்து
வழிகிறாய் - நீ..
தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை....
————————-
காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை....
————————
நீ
நல்லவளே இல்லை
பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்...
———————–
உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது
தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று.......
***********************************************
*******************************
*************************
******************
**********
*****
****
**
-யாழ்_அகத்தியன்
|