* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இதயமானவளே...!
 


இதயமானவளே...!




காதலித்தால் இதயங்கள்
இடம் மாறுமாமே வா
இதயங்களை மாற்றிவிட்டு
காதலித்து பார்ப்போம்.....





************







நான்  வார்த்தை தேடி
அலைந்தபோது வந்து
கிடைத்த கவிதை நீ....





************






பயந்து பயந்துதான்
உன்னை என் அம்மாவுக்கு
அறிமுகப்படுத்தினேன்...


அவா
உன்னை ஆலாத்தி எடுத்து
வரவேற்பா என்று தெரியாமல்...





*************




 

வறண்ட பூமியை
விட நீ வைத்திருக்கும்
குடைதான் மழைக்காக
தவிக்கிறது....





***********


 



உலகம் அழியும் நாளில்
நான் உயிரோடிருந்தால்

தற்கொலையாளியாய்
உன் மேல் பாய்ந்துதான்
என்னை அளித்துக்
கொள்வேன்......






 **********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 39 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free