என் காதலும் என் கண்ணிரும்
என்னை நனைத்தே அழுக்காக்க
இன்னும் நீ மாறவில்லை...
பழகிய நாட்களை மறக்கவே
பல வருசம் கிடக்கையில
பாவை உன் முகம் மறக்க
எத்தனை ஜென்மம் நான் எடுக்க..
*****
மறக்கத்தான் சொன்னாயா
மறந்துவிட சொன்னாயா
என்ற காரணத்தை கேக்கவே
பேசாமல் போய்விட்டாய்
கிறுக்கன் நான்
காதலை சொல்லி சொல்லி
கவிதையே செத்துடிச்சு....
*****
உன் பெயரை மறந்தேனென
துணிவாய் நான் சொல்ல
நினைத்தாலும் என் பேனா
எனோ உன்பெயரை
எழுதி தொலைக்கிறது...
*****
விட்டுபோகாதே விட்டுபோகாதே
என உன் கால் பிடிச்சு கெஞ்சியும்
உன் படம் மட்டும் பார்த்தவன்தான்
பெரிதிண்ணு பார்க்காம போனாயடி...
*****
ஒரு பானை சோத்துக்கு
ஒரு சோறு போதுமடி
ஒட்டுமொத்த பெண்களையும்
உன்னில் பார்த்ததால்- உன்னால்
உன்னால்த்தானடி
பெண்களை வெறுத்தேன்...
*****
உனக்காய் எழுத நினைத்தால்
வார்த்தை வர மறுக்கிறது
இறுதியாய் ஒன்று
என் கவிதைகள் அழிந்தாலும்
என் காதல் பொய்யானாலும்
உன்னை நினைத்தே
என் உருவம் சிதைந்தாலும்
உன்னால் நான் அடைந்த
அனுபவங்கள் அனைத்தும்
என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்...
*****
கடைசியாய் ஒன்று
என் கவிதைகளை
எங்கு கண்டாலும்
கண்ணீரை துடைத்து
விடு..
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்