தேவதையானவளே.....!
எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்...
**********
நீ மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்....
**********
நீ கவிதை
படிக்கிறாயா
இல்லா...
உன்னைக்
கவிதை
படிக்கிறதா
பார்
மறுபக்கம் போக
பஞ்சிப்படுவதை.....
**********
உன்னைச் சேரும் ஒவ்வொன்றும்
என்னை ரசிகனாக்கிறது
இசைக்கும் உன்
கால் கொலுசு முதல்....
**********
துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்
நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறேன்...
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|