* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நினைவில் ஒரு காதல்...!
 


நினைவில் ஒரு காதல்.....!




 
காதலைவிட
காதலர்களே உனை
அதிகமாய் நினைவு
படுத்துகிறார்கள்.....






************







நீ  வாசிக்கிறாயோ
இல்லையோ... உன்னால்
பலர் வாசிக்கிறார்கள்
என் கவிதைகளை......





************







 
நீ  அறிவாளிதான்
எழுத்துப் பிழைவிட்ட
என் கவிதைகளை
கண்டும் சுட்டிக்
காட்டாமல்
வாசிக்கிறாயே....






************





 

எனக்கு கிடைக்காமப்
போன அழகான பரிசு நீ
உன்னால் கிடைத்த
அசிங்கமான பரிசு
என் பேனா.......






************







உனக்காக எழுதிய கவிதைகளை
மறந்துவிட்டேன் உன்னால் எழுதிய
கவிதைகளைத்தான்
ஞாபகம் வைத்திருக்கிறேன்
தயவு செய்து நான்
மறந்ததையாவது வந்து
ஞாபகப்படுத்திவிட்டுப்  போ..




மறுபடியும் நான்
காதலனாக வேண்டும்......







**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 14 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free