* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  ஊமையானவளே…...!
 

தினமும் நான் 
பேசும் வார்த்தைகளை
மொழிபெயர்த்து 
நீ வெளியிடுகிறாய்
உன் மெளனக்
கவிதையை.......

************ஆரம்பத்தில் 
உன் மெளனத்துக்காகவே
இடைவேளையின்றி 
பேசிக் கொண்டிருப்பேன்
நீயும் பேசமால் 
கேட்டுக்கொண்டே
இருப்பாய்...

இப்பொழுதெல்லாம் 
உனக்காக பேசிப் பேசியே
உன்னை மாதிரியே
நானும்
மெளனியாகிவிட்டேன்....


**********


எப்பொழுதெல்லாம் 
மெளனமாக இருக்கிறேனோ
அப்பொழுதெல்லாம்
உன் நினைவுகளோடு
பேசிக் கொண்டிருக்கிறேன்....


*************


எப்பொழுதெல்லாம் 
பேசுகிறேனோ
அப்பொழுதெல்லாம் 
உன்னை பற்றியே
பேசுகிறேன் 
உன்னோடு மட்டும்....


************மெளனமே  சிறந்த மொழி
மெளனமே 
பேசவைக்கும் மொழி
மெளனமே 
பிடிக்கவைக்கும் மொழி
மெளனமே சிறந்தவிரதம்
என்பதை புரியவைத்து
என்னையும்  உன்னைப் போல்
மெளனியாக்கிவிட்டாய்.....


**********


உண்மைதான்மெளனமே 
அழகான மொழி
நான் பேசாத பொழுதுகளில்ஆனாலும் என்னைத் 
தினம் கொல்லுவது
உன் மெளனமொழிதான் 
என்பது உனக்குத் தெரியுமா...?

************


அன்பே அறிந்துகொள்
உன் மெளனத்தால் 
பாதிக்கப்படுவது
மற்றவர்கள்தான்
என்பதை.....


**********************************
************************
***************
*****
**
*-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free