* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  ஈரமில்லா ரோஜா.......!
 


ஈரமில்லா ரோஜா.....!





நீ வீசும் காற்றுக்காய்
காதலால் துளைக்கப்பட்ட
குழலே என் இதயம்..........






************








நீ  எனக்குக் கொடுத்த
தண்டனை எது தெரியுமா..?
கடலில் வாழ்ந்த என்னைக்
காப்பாற்றுகிறேன் என
தொட்டிக்குள் கொண்டு
வந்ததுதான்.....






************







நீ என்னில் முளைத்ததும்
நான் உன்னில் முளைக்காமல்
போனதிலும் தெரிந்து கொண்டது
ஒரே விதையென்றாலும் வேர்விட
எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை
என்பதுதான்............






************






 
 உன்னால் புகைக்கப்பட்ட
சிகரட் நான் என்றாலும்
உனக்கு முன்னே இறந்துபோன
பாக்கியசாலி நான்...........





************






 
என் வாழ்க்கை எனும்
பேருந்தில் இறங்கிப் போன
மறக்க முடியாத
சாரதி நீ......







**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 20 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free