என் சோம்பேறி மனசு
செய்த வீரமான செயல்
உன்னைக் கண்டதும்
ஓடிப்போய்
உன்னைத் தொட்டுவிட்டு
திரும்பி வராததுதான்....
************
கையசைத்துவிட்டு
கல்லூரிக்குள்
நுழைந்து விடுகிறாய்
நீ
விடை பெற்றுப் போகும்
கடைசி நாள் மாணவன் போல்
வீடு செல்ல மனமில்லாமல்
நான்.....
************
நம் காதலுக்கு
முதல் எதிரி
நேரம்தான்
பார் நாம்
சேர்ந்திருக்கும் போது
மட்டும்தான்
போட்டி போட்டு
ஓடுகிறது.....
************
உன்னைக் காதலிக்க
வேண்டாம் என்பவர்களை
கூட்டி வா
ஒரு நிமிடம்
நீ இல்லாத என்னை
கொடுத்துப் பார்ப்போம்
சமாளிக்க முடிந்தால்
சமாதானம் பேசுவோம்....
************
என் கைகளுக்கு
இதுவும் தேவை
இன்னும் தேவை
என்னை எதுவும்
கேக்காமலே உன்னை
அணைத்து பழகிவிட்டு
நீ தூரம்
இருக்கிறாய் என்று
தெரியாமல்
தேடிக் களைக்கிறது....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|