என்னவளே.......!
இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர......
************
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை............
*************
உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று....
************
நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை
நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்......
************
நீ எது கேட்டாலும் சொல்வேன்
உன் அழகுகளில் எந்த அழகு
பிடிக்கும் என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்
சொன்னால்... உன் எல்லா
அழகுகளின் கோவத்துக்கும்
ஆளாகிவிடுவேன்.......
*********************
*************
********
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|