* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  சில காதல் கவிதைகள்…..!
 

நீ  என் இதயத்தில் 
இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள் 
என்பதால்தான்
உன்னை  காதலிக்கிறேன...

************என் கவிதைகளில்
எழுத்துப்  பிழைகள் 
அதிகம்தான்...என்னுடைய பிழைகள் எல்லாமே
நீ கவிதையாக இருந்தும்
எழுதியதே......


***********நான்  உன் கவிதைகளுக்கு 
வாசகன் மட்டுமல்லஉன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும்
அவர்களின் கண்ணாடியின்
தூசு துடைக்கும்
வேலைக்காரனும்  கூட...


************அன்பே உனக்காக
என்  கவிதைகளை
  தூதனுப்புகிறேன்
காரணம்...உன் இதயத்தில்  ஓர்
இடம்  வேண்டும்
எனக்கு..


ஏனென்றால்
எனக்கான  உலகம்
அங்குதான்
இருக்கிறது...************


நிலா........
நீ வேண்டும்
என்கிறது
என் இரவுகள்..நிலா....
நீ வேண்டும்
என்கிறது என்
நட்சத்திரங்கள்....ஏன் தெரியுமா...?

எனக்கான துணை
நீ என்பதால்....

************நீ நீலாதான்
அதற்கான  சாட்சியங்கள்
என்னிடம்  நிறையவே உண்டுநீ நிலாதான் 
அதனால்தான் நட்சத்திரங்கள்
எனும் கூட்டத்தோடு
எப்போதும் வருகிறாய்.....

************


உன் துணையாகும்
வயதுதான்  எனக்கு 
இருந்தும்திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்....

************


இன்னும் எனக்கு
ஞாபகம்  இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான்  அப்பா என்று
அறிமுகப்படுத்திய
உன்  குழைதைத்தனம்....

************உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை.........உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்.....


**********************************
************************
***************
*****
**
*


 
 
-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free