உன் இருகையில் மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்.....
****************
அம்மா உனக்கு அவ்வளவு
பாரமாய் இருந்தேன் என்றா
பால் கொடுத்து என்னை
வளர்த்தாய் நீ தூக்கவே
முடியாதளவுக்கு.........
****************
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்
தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு.......
*****************
ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்
நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது......
*****************
எல்லாம் சேலைதான்
எனினும்
நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது......
*****************
என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட
நான் விழுந்துவிடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்........
********************************************
****************************
*****************
********
****
**
*
யாழ்_அகத்தியன்
|