இனியவளே....! {07}
இனியவளே…..
என்னோடு நடந்து வந்த நட்பு
ஏன் உன்னைக் கண்டதும்
ஓடி ஒழிகிறது ஓ…
அவ்வளவு பயமா
காதலுக்கு.......
********************
காதலைக் காட்டிக் கொடுக்காதேயேன்று
அதிகமாய் என்னிடம் உன்னைப் பார்க்கும்
போதுதான் குட்டு வாங்கிகிறது
என் மனம்.......
********************
நீ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
சொல்ல தயங்குகிறேன்
என் முதல் கவிதை
உன் பெயர் என்று......
********************
ஒரு காதல் பறவை என் மேல்
உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறது
என் நட்பென்ற தொடர் நாடகத்தை.......
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|