காதல்..................!
என் நலன்களை
நீ விசாரித்த பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்....
……………………………………..
நீ என் கூட
கோபம் போடும்
நேரங்களில்தான்
காதல் என் கூட
நேசம் போடுகிறது....
……………………………………..
நீயும் நானும் மெளனம்
காக்கும் நேரங்களில்தான்
காதல் நம்மை வைத்து
கவிதை எழுதுகிறது....
……………………………………..
நீ பிரிந்த பிறகுதான்
என் காதலை அளக்க
அளவுகோல்
இல்லையென்றது காதல்....
……………………………………..
எழுத்துப் பிழை விட்டாலும்
பரவாயில்லை கவிதை எழுத
சொல்லும் காதல்.....
……………………………………..
கற்றுக்கொடுக்கும்
விட்டு கொடுப்பது எப்படி
விட்டுக்கொடுப்பதுதான்
காதல் என்று.....
……………………………………..
மீசை வளர்ந்த பிறகுதான்
நான் வயசுக்கு வந்தேனாம்
பொய் சொல்கிறார்கள்…
காதல் வந்த பிறகுதான்
நான் வயசுக்கே வந்தேன்......
……………………………………..
நீ
என்னங்க.. என்று
என்னை அழைக்கும்
போதுதான் காதல்
என்னை தட்டி எழுப்புகிறது......
……………………………………..
நீ பிரிந்து தூர மறையும்
போதுதான் காதல் எனக்குள்
உதிக்க ஆரம்பிக்கிறது.....
……………………………………..
உன் பிரிவிலாவது
பொய் சொல்ல
வைத்திருக்கும்
காதல்………..
*******************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|