* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே...[12]
 


கவியானவளே...[12]

உன் பார்வையில்
பார்த்துக் கொண்டேன்
என் கண் காட்சியை.....


********************

 

உன்னை சுற்றியதில் 
சேலைக்கு கிடைத்தது
அழகான தேவதை.....

********************
  

தேடிப் பார்க்க தொடங்கினேன்
எனக்குள் இருக்கும்  உன்னைக் கொண்டு
உனக்குள் இருக்கும்  என்னை.....


 ********************
 
 
உன்னை பார்த்த களைப்பில்
ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்....
*******************


 
முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான் உன்
உதட்டில் ஒரு மச்சம்.....**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 9 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free