இருவரும் சுமப்பது....
************
காதல் ஒரு குழந்தைதான்
ஆனால் அதால் அழமட்டுமல்ல
பேசாமல் அழவும்
தெரியும்.........
************
காதல் ஒரு குழந்தைதான்
ஆசைப்பட்டால் அது
கிடைக்கும்வரை அழும்.....
************
காதல் ஒரு குழந்தைதான்
எதைக் கொடுத்தாலும்
உடைத்துப் பார்க்கும்....
************
காதல் ஒரு குழந்தைதான்
சிரிக்கவும் அழவும்தான்
தெரியும்........
************
காதல் ஒரு குழந்தைதான்
வேண்டும் என்றாலும் அழும்
வேண்டாம் என்றாலும்
அழும்......
***********
காதல் ஒரு குழந்தைதான்
எல்லாராலும் தூக்க முடியும்
எல்லாரலும் அழுவதை
நிறுத்த முடியாது....
************
காதல் ஒரு குழந்தைதான்
ஆனாலும் அதை யாராலும்
எறியவும் முடியாது
அதை யாரலும்
அனாதையாக்கவும்
முடியாது
அதற்கு பெற்றொர்களே
கிடையாது
ஆம்
யாரின் உதவியும் இன்றி
யாரின் உறவும் இன்றி
பிறப்பது இந்தக் காதல்
குழந்தை மட்டும்தான்......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|