* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நீயே நிலா.. நிலாவே நீ.....!
 


நீயே நிலா...... நிலாவே  நீ.......! 
 



 
வானத்தில் நீந்திக்
கொண்டிருக்கிறது நிலா


நடுங்கியபடியே

      ரசித்துக்கொண்டிருக்கிறாய் நீ......





******************






 
நீ இல்லாத பகல்கூட
நிலவில்லாத இரவுதான்
எனக்கு..........





******************







நிலாவை ரசிக்க  வாசல் வந்தேன்
எனக்கு முன்னே  வளர்பிறையாய்  நீ...



தேயத்
தொடங்கினேன்  நான்
எதை ரசிப்பது  என்ற
குளப்பத்தில்........






******************








நீ நிலாவை ரசிக்காமல் தூங்க மாட்டாய்
என்பதில் பெருமை  நிலாவுக்கு..


நீ ரசித்த
நிலாவை வழியனுப்பும்வரை
நான் தூங்குவதில்லை என்பதில்
பெருமை எனக்கு.......






*******************







உனக்கு முன்னே சிலர்
குறுக்கே போய்க்கொண்டிருந்தார்கள் 
என்ன செய்வது நிலாவை மறைக்கும்
சொற்ப நேரத்தில் சுகம் காணும் 
முகில்கள் அவர்கள்........






******************








இமைக்காது நிலாவை
ரசித்துக்கொண்டிருந்தாய்


முகில்களிடம்
கைகள் வாங்கி
முகம்   மறைத்து 
வெக்கப்படுகிறது நிலா........






******************





 

நடக்கும் தூரத்தில்
நிலா இல்லை எனக்கு


ஆனாலும்


உன்  கால் தடத்தில்
தேய்பிறையாய் நிலாவை
காண்கிறேன் நான்.......






******************







அமாவாசை இரவிலும்
பெளர்ணமி நிலவாய்
என்றும் நீ எனக்கு......






*****************************************
******************************
**********************
***************
*********
*****
***
*






 -யாழ்_அகத்தியன்



 
 
 
 
 
 
 
  Today, there have been 182 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free