* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் உயிரானவளே.....!
 


என் உயிரானவளே......!87912456gp0.jpg

என்னைப் பிரிந்து  நீ
எங்கோ வாழ்கிறாய் இருந்தும்
நீ பிரிந்ததை  ஞாபகப்படுத்த மறுக்கிறது
என் காதலின் நினைவு.....

*****

உன்னோடு வாழ்ந்த  காலத்தைவிட
உன்  நினைவுகளோடு வாழும்
காலம்தான் அதிகம்  என்றபோதும்
என்னைக்  கவலைப்பட விட்டதில்லை
உன் ஞாபகங்கள்.....

*****

எரிக்க மனமின்றித்தான்  எரித்தேன்
உன் கடிதங்களை  அதன் எழுத்துக்களாவது
என்னோடு எரிந்துவிட
வேண்டும் என்பதற்க்காக.....


*****

என் கவிதைகள்  எல்லாமே
சோகத்தோடு பிறப்பதால்த்தான்
உன்  கண்ணில் படமாலிருக்க
என்      கையாலே  கொள்ளிவைத்து
விடுகிறேன்...


*****உன்னைச் சந்திக்கும் வரை
உன் முகத்தை யார் யாரோ  முகத்தில்
தேடிப்பார்த்தேன் உன்னைப் பிரிந்த பின்
என் முகத்தை யார் யாரிலோ
தேடிப் பார்க்கிறேன்.....

******

தயவு செய்து  என்  பெயரை 
உன்   பிள்ளைக்கு  வைத்து    விடாதே
நீ உயிரோடு இருக்கும்  போதே
அனாதையாகிவிடும்....


******

என் ஆயுளின்  அந்தியிலாவது
உன்னைச்  சந்திக்க  நேர்ந்தால்
உன்னிடம் சொல்லச் சுமந்த
வார்த்தை இதுதான் _உன்னை
நான் மறந்து விட்டதாகவே
நீ நினைத்து விடு என்பதே...


*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்

 


 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free