* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் நிலா நீ*.....!
 


***என் நிலா நீ***...........!





நிலா....   நீ வருவாயேன
என் பகல்களையே இரவாக்கி
காத்திருந்தேன் நீ
வரவேயில்லை  இன்னும்
விடியவில்லை எனக்கு.........




 
************







நீ இல்லாத இரவில்
பகலால்  வாடுகிறேன்
நீ இருக்கும் இரவில்
உனக்காய் பாடுகிறேன்..........





************







உன்னைப் பாட பலர் இருந்தும்
உன்னைத் தேட நான் மட்டுமே
உன்னால் படிக்க பலர் இருக்கலாம்
உனக்காக வடிக்க நான் மட்டுமே.......





************





 
முட்கள் இல்லாத ரோஜாவை
எனக்கு பிடிக்காது நீயில்லாத
பகலைப் போல..........





************






 
துளைத்த புல்லாங்குழலில்தான்
இசை பிறக்கும் அது அழகு
இரவில் நீ இருக்கும் போது
பிறக்கும் கவிதை போல........






************







நிலவே....
எனக்கு இரவு பிடித்திருக்கிறது
நீ எனக்காக சூரியனிடம் கடன்
வாங்கி ஒளிவீசுவதால்..........






**********************************
************************
***************
*****
**
*




 
-யாழ்_அகத்தியன்
 
 
 
 
  Today, there have been 145 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free