* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எழுத மறந்த கவிதைகள்..!
 



எழுத மறந்த கவிதைகள்.....!



 

காதலில் வென்ற என் அப்பாவின்
எதிர்ப்பை மீறி  சேர்த்து   வைத்தார்
காதலில் தோற்றுப் போன
என் சித்தப்பா என்னையும்
அவளையும்..............





****************







கவிஞர்களிடம்  காதல்  தோல்வியா
 என்று கேக்கும்   பெண்களிடம்
ஒரு கேள்வி   கேக்க வேண்டும்
உங்கள் பெயர்களை  வைத்த
தந்தையும்  காதலில் தோற்று 
  போனவரா என்று........?






****************






என் அன்னையை  வயோதிபர்
இல்லத்துக்கு அனுப்பி வைத்த
என் மனைவி  மறந்து விட்டாள்
தன் பிள்ளைக்கு  வயோதிபர்
 இல்ல   முகவரியை
காட்டிக்    கொடுத்ததை.....!






****************





நீங்கள் அழுத்திய இலக்கம்
இப்போது பாவனையில் இல்லை
என்று அழகாய் சொல்கிறாள்
யாரோ     ஒருத்தி......




என் மேல் அவளுக்கு இருக்கும்
அக்கறை கூட இலக்கத்தை
மாற்றிய உனக்கில்லையடி...






****************








தெரிந்தோ தெரியமலோ
அதிகமாய் வெளி நாட்டு
ஆண்கள்தான் விதவைக்கு
வாழ்க்கை கொடுக்கிறர்கள்



புரியவில்லையா...




உள் நாட்டுக் காதலனை
சாகடித்து  விட்டல்லவா
கழுத்தை நீட்டுகிறாள்
வெளி நாட்டு
மாப்பிள்ளைக்கு......






***********************************
**********************
*************
*****
**
*

 
 
 
 

 

-யாழ்_அகத்தியன்

 

 
 
 
  Today, there have been 172 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free