உன் கையிலே உனது வாழ்க்கை......!
எல்லாம் நிறைந்ததே
வாழ்க்கை
வாழ்க்கையின் எல்லா
மணித்துளிகளும்
சந்தோசமானவையல்ல
எவன் ஒருவன்
துன்பத்தை எதிர்த்து
போராடுகிறானோ
அவனே வாழ்க்கையில்
வெற்றிபெறுகிறான்
இறக்கும் திகதி தெரிந்து
யாரும் பிறப்பதில்லை
பிறந்த எல்லோரும்
சாதனை படைத்து
இறப்பதில்லை
எதைக் கண்டும் அஞ்சாதே
எதை செய்வதாக இருந்தாலும்
ஆழமாய் யோசி
யோசித்தது சரியா என்று
இன்னொரு முறை யோசி
உன்னை நீ நம்பு
யாரலும் முடியாததைக்கூட
முயற்சித்தால் உன்னால்
முடியும் என்று நம்பு
வாழத் தெரியாதவன்
தற்கொலை செய்து
இறந்து போகிறான்
வாழத் தெரிந்தவன்
இறந்தபின்னும்
வாழ்கிறான்
காதலும் ஒரு பசிதான்
உன் பசியை
நீ சொல்லாதவரை
அதை யாராலும்
புரிந்து கொள்ள முடியாது
காதலை சொல்ல
சந்தர்ப்பத்தை எதிர் பார்க்காதே
சந்தர்ப்பத்தை நீ உருவாக்கு
ஒவ்வொரு சந்தர்ப்பமும்
ஒவ்வொரு வரமென நினை
யாரும் உன்னை புரிந்து
கொள்ளவில்லை
என்று நினைக்காதே
உனக்குத்தான் உன்னை
விளக்கப்படுத்த தெரியவில்லை
என்பதை புரிந்து கொள்
நீ
வாழ்க்கையை பணத்தால்
வாங்க நினைத்து
வாழ்க்கையின் தேவையை
அதிககரிக்கிறாய்
கடைசியில் அதுவே உன்
நிம்மதியை
இழக்க செய்துவிடுகிறது
நீ விழித்திருக்கும்போதே
இந்த உலகம் தன் கனவை
உன்னிடம் திணிக்க நினைக்கும்
இடம் கொடுக்காதே
உன் காதுகளால் நீ கேட்பது
உன் கனவாக முடியாது
நீ காண நினைக்கும் கனவை
உன் கண்களால் காண்
நடந்தவற்றில் கசப்பானவையை
மறந்துவிடு நடப்பவை நல்லதாய்
நடக்க முயற்சி எடு
உன் கையிலே உனது வாழ்க்கை.......
*******************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|