தொட்டால் சிணுங்கி.....!
உன்னைக் கண்டவன்
கண்களுக்கு கண்டதில்
எல்லாம் நீ.......
************
நான் சுட்ட கவிதை
உன் பெயர்
யாரும் சுடாத
கிறுக்கல்
என் பெயர்........
************
உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்
நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே.......
************
உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்...........
************
உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ.........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|