பாடல்வரியாக கிறுக்க......!
ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ
பெண்ணே அதற்காகத்தானே நான்
வாழ்கிறேன்..
நித்தம் உனை நினைத்தே என்
ஜீவன் துடிக்கிது பந்தம் பாசம்
எல்லாம் நீயே பழகிட வா கண்ணே
நீயே எந்தன் உலகம் நீயில்லாத
உலகம் என் கல்லறையல்லவா உயிரே
உன்னைச் சுமக்கத் தாயவேன் உன் மடியில்
என்றும் குழந்தையாவேன் நீயே என் சொந்தமல்லவா..
ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ
பெண்ணே அதற்காகத்தானே நான்
வாழ்கிறேன்..
என் உயிராய் நீயிருந்தால் உனக்காய்த் ( நான்)
துடிப்பேன் என்னுயிரே நீதானே
என் கவி நீயென்றால் உனக்காய் ( நான்)
சொல்லாவேன் என் கவி நீதானே
என் கனவுகள் நீதானே இரவாய்
நீயிருந்தால் என் கற்பனை நீதானே
என் கவியாய் நீயிருந்தால் வா பழகிட வா...
ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ
பெண்ணே அதற்காகத்தானே நான்
வாழ்கிறேன்..
உனக்காய் வாழவே நான் பிறந்தேன்
என் இதயம் துடிப்பதே நீ வாழத்தானே
கடலுக்கு அலையிருக்கு பூவுக்கு புயல் இருக்கு
அன்பே எனக்கென்று ஏதிருக்கு உன்னைவிட
யாருமில்லை உன்னைப் போல ஏதுமில்லை
வாழ்ந்திடுவோமே ஒன்றாக வா....
ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ
பெண்ணே அதற்காகத்தானே நான்
வாழ்கிறேன்....
*****************************
*********************
************
******
***
*
-யாழ்_அகத்தியன்
|