* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {13}
 



இனியவளே....! {13}




இனியவளே…


உன்னை பார்க்க வேண்டாமென்று
சொல்லும் சமுதாயமே
என்னை பார்க்காததால் இன்னும் இன்னும்
உன்னை பார்க்க வைக்கிறது.......






*****







பெற்றோர்களை சுற்றி வந்தேன்
உலகறிந்த பிள்ளை என்றார்கள்
உன்னை சுற்றி வந்தேன்
ஊரைவிட்டே ஒதுக்கி
வைத்தர்கள்.....






******







உன்னை நான் கை விட்டாலும்
என்னை நீ கை விடாதே
நம்பிக்கை இல்லாமல்
என்னால வாழ முடியாது...






*******






தனியா நடந்தால்  பாதையெங்கும்
முள்ளாய் குத்துகிறது
உன் கூட நடந்தால்
பூக்களாய் வரவேற்கிறது....






*******







என்னை கண்ணாடியில் பார்த்தால்
என் இறந்தகாலம் தெரிகிறது
உன்னை நேரில் பார்த்தால்
என் எதிர்காலம் தெரிகிறது.....






*****************************************
*******************************
*********************
***********
****
*

 

-யாழ்_அகத்தியன்

 

 
 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free