* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அன்பே ஆருயிரே......!
 


ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்க மறந்து போன
காதல் நம்முடையது......


*************அழகிய கவிதையே
என் பேனாவின் மையே
உன்னைக் கிறுக்கியே நான்
இறந்து கொண்டிருக்கிறேன்..
தினம் ஏக்கத்தில்
விழித்திருப்பேன்
பாதையெங்கும் 
உன் விம்பம்தேடி..
எங்கே நீயென
தேடித் தேடியே
நித்தம் முத்ததில்
நானிருப்பேன்.....


************உனக்காக காத்திருந்து
என் உயிர் பிரியுமென்றால்
அதைவிட வேறன்ன வேண்டும்
சொல்லன்பே.....நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே.......

***********எத்தனை இரவை 
என் விழி பகலாக்கியிருக்கும் 
எல்லாம் அன்பே நிலா 
உன்னை காணத்தானே...என்று புரிவாய் எனை என
என்றும் காத்திருக்கும் உன்
காதலன் நானல்லவா.....


***************


காதலி எனைக் காதலி
உன் கரம் பிடிக்க கை
நீளுதே...
இதமான தென்றலை 
என்றும் வீசுவேன் 
என்னருகே நீயிருந்தால்
உன் மடியில் நான் தூங்க


************எங்கே நீ சென்றாலும் 
உன்னோடு ஓடிவரும் 
நிழலாக நானிருப்பேன்
என்பதை நம்பிவிடு...


************ஆயிரம் சொன்னாலும் உலகம்
அன்பே உனை சேர
அகிலமே எதிர்த்தாலும்
கோழையாய்  நான் முலையில்
படுத்துறங்கமாட்டேன்......
போராடியே போராளியாய்
உன் கை பிடிப்பேன் என்
உலகமே நீயாக வேண்டும்
என்பதே என் கொள்கை.....


*************எதிர்ப்பு இல்லாத
வாழ்க்கை வேண்டாம்
எனக்காய் நீயும் 
ஓடி வரவேண்டாம்
விழுப்புண் அடைந்தாலும் 
வேங்கை நான் உன்னைக்
கேக்க  வாசல் வருவேன்
அதுவரை பொறுத்திரு 
முடிந்தவரை சமாதானமாய்
பேசிப்பார்ப்போம்........


************


சிறந்த வீரனுக்கு 
அழகு பொறுமையாம்
அழகு தேவதையே 
உன்னால் வீரனானேன்
உனக்கென பொறுக்க 
மாட்டேனோ......


**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்


 
 
 
  Today, there have been 58 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free