* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  முதல் கவிதை...!
 


முதல் கவிதை...! 
 
இதுவரை  கணக்குகளை மட்டும்
விளங்கபடுத்த  என் கையோடு
கூடிய பேனா


 
முதல் முறை உனக்கு கவி
எழுத  என் கையோடு  கூட்டியதில்
வந்த கழித்தல்கள் இவை.....

*****தயவு செய்து  சிரித்துவிடாதே
கலைந்து கிடக்கும்  என்
எழுத்துக்கள் இன்னும்
கலைந்துவிடும்.....
 

*****பல கோடி கவிதைகளை
கண்டபின்னும் பசியாறவில்லை
இன்னும் காதலுக்கு எப்படி
எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி.....
சிலையின் கையில்
கொடுக்கப்பட்ட பேனாபோல்
அசையாமல் மிதக்கிறேன்
கற்பனைக்கடலில்   எப்படி
எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி......
எண்ணில் விட்டதில்லை
எழுத்துக்களில் விடுவதுண்டு
பிழை எப்படி 
எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி.....


*****உனக்காய் கவி எழுத 
விடிய விடிய யோசித்ததில் 
இரவுகளின் நீளத்தை
என்னால் இப்படித்தான் 
அளக்க முடிந்தது.....
 
நீ நீயாக இருந்தால்
நான் நானாக இருந்தால்
நமக்கு மிஞ்சப் போவது
எதுவுமில்லை என்று.....
 

*****தயவு செய்து அன்பே
என்னை மன்னித்துவிடு

உன்னை கணக்கிடச்சொல்
அரை நொடி போதும் என்
பேனாவுக்கு.....
 
உனக்காய் கவி எழுதச்சொல்
அரை ஜென்மம் போதாது....


*****
அன்பே... காதலுக்கு கவிதை
அழகுதான் ஆனால்
கல்யாணத்துக்கு கணக்கு
மட்டும்தான் அவசியம் எனவே

வா அன்பே வா இன்றே
ஆரம்பிப்போம் நம் கணக்குகளை... **********************************
************************
***************
*****
**
* 
-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 62 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free