என் பாடல்....{07}
எங்கே எங்கே என் வெண்ணிலா
தேடித் தேடியே தேய்கிறேன்
நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை
நீதானே என் நிலா........
எங்கே எங்கே என் வெண்ணிலா
தேடித் தேடியே தேய்கிறேன்
நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை
நீதானே என் நிலா.......
எந்தன் உலகமே உனக்காக
மாறிப்போனதே
உன்னைச் சுற்றியே
எந்தன் நினைவு வாழுதே
என் இதயமோ எப்போதுமே
உன் பெயர் சொல்லி துடிக்கிதே
இது என்னடி புது வாழ்க்கை
வாழ்கிறேன்......
எங்கே எங்கே என் வெண்ணிலா
தேடித் தேடியே தேய்கிறேன்
நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை
நீதானே என் நிலா.....
உண்மை சொன்னால் என்ன
கண்ணே என்னையும் சிலர்
வாசித்து போனதுண்டடி
அடி அடி யாருமே யாருமே
எனை வாங்கி போனதில்லடி
எந்தன் சொந்தமே நீதானே
உனக்கான கவி நானே
எனக்கான வாசகி நீயே
படைத்திடவா நான்
படித்திட வா நீ......
எங்கே எங்கே என் வெண்ணிலா
தேடித் தேடியே தேய்கிறேன்
நான் தேய்பிறை
வா வா என் வளர் பிறை
நீதானே என் நிலா....
**************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|