காதலானவளே...!
உன்னை எழுதுவதைவிட
உன்னை வாசிப்பதில்தான்
அதிக ஆர்வம் எனக்கு.....
************
உனக்காய் கவி எழுத கற்பனைக்
குதிரையை தட்டிவிட்டேன்
அது உன்னைக் காட்டிக்
கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது....
************
என் கண்கள் காட்டிக் கொடுத்ததில்
துரோகமில்லாத ஒன்று என்றால்
அது உன்னைக் காட்டிக் கொடுத்தது
மட்டும்தான்........
************
நீ குளிக்கையில் தண்ணீரோடு
நானும் குளிக்கிறேன்.....
************
உன்னைக் கவிதையாய் வெளியிட
விரும்பி இன்றுவரை உன்
கண்களை பற்றித்தான் எழுதிக்
கொண்டிருக்கிறேன்.........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|