* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  பிரியாத ப்ரியம்.......!
 


பிரியாத   ப்ரியம்.....!உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே
அதாவது கேக்கிறதா...?

*****
என்னை மறந்து  வாழத்தான்
இடம்பெயர்ந்தாய்


என் நினைவுகளை
மறந்து வாழ
என்ன செய்தாய்…

******

என் கண்ணைத்தான்
அதிகம்பிடிக்கு மென்றாய்
உண்மைதான் அதை
மட்டும்தான் என்னால
அடக்க முடியவில்லை..

*****என்னை உண்மையாக
காதலித்தாய் என்றால்
என்னை மறந்துவிடு என்றாய்
அப்போதுதான் பொய்யானது
என் காதல்..

*****

வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன்
காதலி என்ற ஆயுதத்தை
தொலைத்தபின்..


*****

என்னை எனக்கே
பிடிக்காத போதுதான்
உன்னை மட்டும்  பிடித்தது
அதே என்னை எல்லாருக்கும்
பிடிக்கும் போது
எப்படி பிடிக்காமல்  போனது
உனக்கு மட்டும்  என்னை..

*****என்னை ஞாபகப்படுத்த
எந்த கவிதையும்
எழுதியதில்லை..


எழுதும்  கவிதை எல்லாமே
என்னை நீ மறக்காமல்
இருந்தால்
மறக்க வைக்கத்தான்..

*****

movgal4118yu8.jpg

இப்பொழுது எல்லாம்
உன்னை நினைக்காத  போதும்
கண்ணீர்  வருகிறது
நீதான் என் கண்ணில்
படாமல் வாழ்கிறாயே.....

*****

என்னை ஞாபகப்படுத்தும்
எந்த பொருளையாவது காண நேர்ந்தால் 
தயவுசெய்து  அனாதையாய்  விட்டுவிடாதே
ஏதாவது ஒரு  குப்பைத்  தொட்டியில்
போட்டுவிடு  கோடி புண்ணியம் கிடைக்கும்..


****************************************
*******************************
*********************
***********
****
* 

-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 11 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free