தரிசனமானவளே.....!
உன் அமைதியான
வேண்டுதலால் பொறுமையை
இழந்திருப்பாள் பூமாதேவி......
************
நீ சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு பிடித்தது
தேவதை தோசம்.....
***********
நீ
முருகனைச்
சுற்றுகையில்
முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்......
************
அழகானவள் கிடைக்க
வேண்டும் என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும் உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க வேண்டும்
என்கிறார்கள்..........
************
கடைசியில் எனக்கும்
சந்தேகம் வந்துவிட்டது
பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா..?
கோயிலைச் சுற்றுகிறார்களா..?
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|