* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  யன்னல் நிலவு.....!
 


யன்னல் நிலவு....!

மறக்க முடியாத உன்
முதல் முத்தம் வேண்டாம்
நான் இறக்க வேண்டும்
கடைசி முத்தம் கொடு....


************


 
நீ தூங்குவதே இல்லையா
என் தூக்கங்களில் கனவாய்
வருகிறாயே....

************எல்லாரும் கவிதைக்குள்
கருத்தைதான் தேடுவார்கள்
நீ மட்டும் உன்னைத் தேடுவாய்....


************

 


நீ வாங்கிக் கொடுத்த
செருப்போடுதான் இன்றும்
நடக்கிறேன் கைகளில்
சுமந்தபடி......


************

 
என் கவிதைகளை எப்படி
படிக்க வருகிறாய் என்பதை
கற்றுக்கொடு
நீ குளிப்பதை
எப்படி எட்டிப் பார்ப்பது
என்பதை கற்றுக் கொள்கிறேன்...


 **********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 8 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free