அன்புடன் நட்பு...!
எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும் காதல்.....
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு.......
*******************
என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்.....
என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்....
*************
காதலி கொடுத்த பூ வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ வாடவில்லை
அதுதான் நட்பு......
******************
காயப்படுத்திய கரம் நட்பென்றாலும்
அதே கரத்தையே தேடும் குணப்படுத்த
நட்பு.......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|