* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உனக்கே நான்.....!
 


உனக்கே நான்.....!


 

ஒழிந்து திரியும்  காதலை
தேடித்தான்   திரிந்தேன் 
யார்  யாரோ  முகத்தில்_ அது
உன் இதயத்தில்  மறைந்திருந்ததை
நீ காட்டிக்   கொடுக்கும் வரை...


*****

marie mahendran

உன்னைத் தேடித்தான்
உலகம் சுற்றப் புறப்பட்டேன்
என்ன அதிசயம்
என் வீட்டு  வாசலிலே உன்னை
இறக்கி  விட்டுப் போனது
நீ சுற்றி வந்த தெய்வம்......


******

உன்னை வைத்துக்  கொண்டு
உலகம் சுற்றிய களைப்பில்த்தான்
புரிந்து  கொண்டேன்_ உன்னைவிட
யாரும் எனக்கு
பொருத்தமில்லை என்பதை....


*****

என்னைக் கைதியாய்ச்  சிறைப்பிடிக்க
யார் யாரோ முயற்சித்தார்கள்
இறுதியில்  நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலனாய்
உன் கணவனாய்
ஆதலால்  உனக்கே உரியவன்
நான்......


*****************************************
*******************************
*********************
***********
****
*-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 12 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free