இலவசம்.........!
உன்னிடம்
நான் இலவசமாய்க்கூட
எதிர் பாக்காத பரிசு
நான் வேணாமென்று
சொல்லியும்
நீ தந்து விட்டு
போன பரிசு
ஆமாம்..
என் மரணம் வரை
மறக்க முடியாத உன்
பிரிவென்ற பரிசு.........
***********
இலவசமாய் எதுவும்
கிடைக்கவில்லை என்பதற்காய்
பெறுமதி வாய்ந்த ஆண்கள்
அழுவது பிடிக்காதென்றாய்
ஓ..
அப்படியென்றால்
பெறுமதி வாய்ந்த
நீ கிடைக்கவில்லை என்று
நானழுவது தவறா.....?
***********
சொல் உன்னை நினைத்துக் கொண்டே
நான் இறக்க வேண்டுமென்றா.....?
பெறுமதி வாய்ந்த என் மறதியை
கடனாய் வாங்குவதாய்
களவாடி போனாய்....?
***********
சொல்
நீ என் பெறுமதி வாய்ந்தவள் என்பதால்
உன்னை வாழ வாழ்த்தவா......?
இல்ல பிரிவில் மட்டும் நீ தனியாய்
போனதை எண்ணி திட்டவா......?
***********
இலவசமாய்க்கூட
யார் பார்வையும் படாதவனாய்
படு மோசமான பாலைவனமாய்க்
கிடந்தேன்
எதற்கடி விழுந்தாய் என் மேல்
முதல் மழையாய்....?
***********
குடிசை வாங்க கூட
பெறுமதி இல்லாதவனை
எதற்கடி கோட்டைகளை
வாங்குமளவுக்கு
நம்பிக்கைகளை ஊட்டினாய்...?
***********
அன்று
உன் முதல் பார்வையிலே
நான் உருகியபோது
நான் பலவினமானவனென்று
எண்ணவில்லை
உன் பார்வையின் பலத்தைதான்
பாராட்ட நினைத்தேன்
ஆனால்
இன்று என் நினைவே பார்வையாக
பார்வையே நினைவாக இலவசமாய்க்
கழிக்கிறேன்......
***********
கையெழுத்து மட்டும் போட
பேனா பிடித்த கிராமத்தவனை
கவி எழுத வைத்தவளே..
உன்னால்
எப்படி முடிந்தது......?
இலவசமான என்னை
பெறுமதி வாய்ந்ததாய்
ஆக்கவும்
பெறுமதி வாய்ந்த உன்னை
பெற்றோர்களுக்காய்
இலவசமாக்கவும்.....?
***********
என்
கண்ணிரை துடைத்துவிடத்தான்
உன் கரங்களுக்கு எட்டாது
என் கவிதையின் கண்ணிரை
துடைப்பதற்காகவேனும்
ஆழமான சமுத்திரத்தையே
அடக்கி வைத்திருக்கும்
உன் கண்களால் இலவசமாய்
பார்த்துவிட்டுப் போ
பெறுமதி வாய்ந்த
உன் கண்ணீரைத்தான்
தேடி திரிகிறது என் கவிதைகள்
நாளைய என் மரணத்துக்காய்
அழுவதற்கு..........!
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்