காகிதத்தாள்......
என் மகன் கையில்
கிடைத்தால்
அவன் கிறுக்குகிறான்
அது அழகான
சித்திரமாகிவிடுகிறது
அத்தனையும்
பொக்கிசமாக்கப்படுகிறுது
என்னவளால்
என் பங்கிற்கு
நானும் கிறுக்குகிறேன்
அது இதுவரை
சித்திரமானதுமில்லை
கவிதையானதுமில்லை
கிறுக்கலாவதால்
என் கையாலே
கசக்கி எறியப்படுகிறது......
************************************************
*************************************
****************************
*******************
*******
****
**
*
-யாழ்_அகத்தியன்
|