* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  சோலையானவளே…....!
 


கூட வந்துவிட்டு
விடைபெறுகிறாய்
வலிக்கத் தொடங்குகிறது
என் கால்களும் மனசும்.....


**********இதழ் பிரியாமல்
புன்னகை செய்துவிட்டு
கடந்து செல்கிறாய்
மலரத் தொடங்குகிறேன்
நான்......


*************தனிமையில் என்னை நானே
சுமந்து கொண்டிக்கிறேன்
பிணமாக நான்....


************உனக்கு பிடித்த
எழுத்தாளன் நான்
என்னையும் பேனாவையும்
எழுத வைத்தே சாகடித்துக்
கொண்டிருக்கிறாய் நீ......


************
உன்னால் வாசிக்கப் படுகின்றன
என் கவிதைகள்
கலைய தொடங்குகின்றன
என் சோகங்கள்..........


**********************************
************************
***************
*****
**
*

                                                                  -யாழ்_அகத்தியன் 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free