* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {05}
 இனியவளே....! {05}


இனியவளே…


உன்னோடு பேசிவிட்டு
கனவு காண்கிறது 
என் கைபேசி


நானோ
பேசிக்கொண்டேதானிருக்கிறேன்
இன்னும் உன்னோடு பேசுவதாய் நினைத்து.....


*************************************பகலில் சந்தித்தால்
திரும்பி திரும்பி
பாக்கிறாய்

இரவில் சந்தித்தால்
என்னையே பாக்கிறாய்


அவ்வளவு மரியாதையா
உன் நிழல் மீது உனக்கு....


**************************************மது அருந்திவிட்டு
கார் ஓடக்கூடாதாமே
எங்கே     உன்
கைக்குட்டையை கொடு

சந்தியில் பொலிஸ் நிக்கிறான்
என் உதட்டில் உன் எச்சிலைப்
பார்தால் பிடித்து விடுவான்....


**************************************என் புத்தகத்தினுல் உறங்கும்
 என்  பேனா போல்
உறங்கிகிறேன்

உனக்காய் கவிதை
எழுதுவதாய்
கனவு கண்டபடி......


*****************************************
*******************************
*********************
***********
****
*

-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 2 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free